பாபநாசம் அணையில் இருந்து 2 ஆயிரத்து 900 கனஅடிநீர்திறப்பு.! மணிமுத்தாறு அணை விரைவில் நிரம்புகிறது

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து இன்று வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை 40 நாட்களாக நீடிக்கிறது. ஒரு சில தினங்கள் மட்டும் மழை பொழிவு குறைந்தது. குறிப்பாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நீடிக்கிறது. பாபநாசம் அணை நீர் இருப்பு 137.15 அடியாக உள்ளது. அணைக்கு ஆயிரத்து 574.33 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 951.41 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 140.84 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு உடைய மணிமுத்தாறு அணை  நீர் இருப்பு இன்று காலை 115.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 697 கனஅடிநீர் வருகிறது.

 இந்த அணை விரைவில் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர் இருப்பு 48 அடியாக உள்ளது. அணைக்கு 322 கனஅடிநீர் வருகிறது. நம்பியாறு அணைநீர் இருப்பு 22.96 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 400 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணை நீர் இருப்பு 50.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை பகுதியல் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 4 மிமீயும், மணிமுத்தாறில் 14.8 மிமீயும், கொடுமுடியாறில் 5 மிமீயும் மழை பதிவாகியுள்ளது. சேரன்மகாதேவியில் 1.6 மிமீ மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்திலும் நேற்று இரவு பல இடங்களில் மழை பெய்தது. இங்குள்ள கடனா அணைநீர் இருப்பு 82.70 அடியாக உள்ளது. அணைக்கு 254 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து அதே அளவு நீர் வெளியறே்றப்படுகிறது., ராமநதி அணை நீர் இருப்பு 82 அடியாக உள்ளது.

அணைக்கு வரும் 40 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை நீர் இருப்பு 68.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 250 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை நீர் இருப்பு 36.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 65 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 131.25 அடியாக உள்ளது.  அணைக்கு வரும் 30 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: கடனா 9, கருப்பா நதி 2, குண்டாறு 2, அடவிநயினார் 12, ஆய்குடி 12, செங்கோட்டை 3, தென்காசி 2.8, சங்கரன்கோவில் 12 மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கீழஅரசடியில் 10 மிமீயும் தூத்துக்குடி நகர் பகுதியில் 0.2 மிமீ மழையும் பெய்துள்ளது. 3 மாவட்டங்களிலும் இன்று பகலில் மேகமூட்டமாக இருந்தது. சில பகுதிகளில் மழை பெய்தது.

Related Stories: