வெளிநாடுகளில் இருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இங்கிலாந்திலிருந்து வந்த இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து இளைஞரின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரான் எனும் வகையில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால், தமிழகத்திற்குள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது எந்த வகை கொரோனா என்பது விரைவில் தெரியவரும் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் நேற்று தெரிவித்திருந்தார்.  இன்று அவர்களுக்கான பரிசோதனை முடிவில் மூவருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: