ஆர்.கே.பேட்டை அருகே இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு

பள்ளிப்பட்டு:  ஆர்.கே.பேட்டை அடுத்த கிருஷ்ணாகுப்பம் மேடு கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் பங்கேற்று தொடங்கி வைத்தார். கலைக்குழுவினர் கல்வியின் அவசியம் குறித்தும் கற்றல் பயன்கள்  பற்றி கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், திருத்தணி கல்வி மாவட்ட  கல்வி அலுவலர் அருளரசு, பள்ளிகளின் ஆய்வாளர் வெங்கடேசுலு, வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், வட்டார வள மைய அலுவலர் கிரி பாபு, பள்ளிப்பட்டு ஆர்.கே.பேட்டை ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

More