மோடி வருகைக்கு முன்னதாக ஆளும் பாஜக அமைச்சர் காங்கிரசுக்கு ஓட்டம்?.. உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பு

டேராடூன்: பிரதமர் மோடி வரும் சில நாட்களில் உத்தரகாண்ட் வரவுள்ள நிலையில், இம்மாநில ஆளும் பாஜக அமைச்சர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக பேசப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடப்பதால், அம்மாநிலத்தில் ஆளும் பாஜக பல்வேறு திட்டங்களை வேகவேகமாக தொடங்கி வைத்து வருகிறது. பிரதமர் மோடி வரும் சில நாட்களில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு செல்கிறார். இதற்கிடையே ஆளும் பாஜக அமைச்சர் ஹரக் சிங் ராவத், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால், உத்தரகாண்ட் அரசியலில் பரபரப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து  ஹரக் சிங் ராவத் கூறுகையில், ‘எனக்கு எதிராக எனது அரசியல் எதிரிகள் சதி வேலைகளை செய்து வருகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இதுபோன்ற வதந்திகள் மிகவும் அருவருப்பானதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது’ என்றார்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங், அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை தனியாக சந்தித்தார். அதனால், இவர் காங்கிரசில் இணைய போவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. தேர்தல் நேரத்தில் ஆளும் பாஜக அமைச்சர், காங்கிரசில் சேரப் போவதாக கூறப்படும் ெசய்திகள் குறித்து மாநில காங்கிரஸ் தரப்பில் எவ்வித கருத்தும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: