மட்டங்கால் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகத்தை உடனே திறக்க வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டங்கால் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசுஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாக கழிப்பறையை உடனே திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்சமயம் மழைக்காலம் என்பதால் அரசின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார கழிப்பறையை திறந்தால் முத்தரையர்கள் தெரு, ஆதி திராவிடர் தெருவில் வசிக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More