டிசம்பர் 7ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அஇ அதிமுக சட்ட திட்ட விதி 30 பிரிவு 2ன் படி, அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறைக்கேற்ப . அதிமுக உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ளது., என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலுக்கான அட்டவணையையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

3-ம்தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

4ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை

வேட்பு மனுக்களை திரும்பப்பெற 6-ம்தேதி கடைசி நாள்

தேர்தல் 7.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது

டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

* தேர்தல் நடத்தும் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More