அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருச்சி, நாகை, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை அதாவது 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories:

More