தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேங்கி உள்ள நீரை இன்றோ, அல்லது நாளையோ முழுமையாக அகற்றி விடுவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2205 குடிசைகள், 273 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் நேற்று மழை, வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மழை, வெள்ளத்தில் சிக்கி 244 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

Related Stories:

More