பாலைவனத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒட்டக சவாரி

சென்னை: தமிழ் உள்பட பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து வரும் ஆண்ட்ரியா, பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். தற்போது ‘பிசாசு 2’, ‘மாளிகை’, ‘நோ என்ட்ரி’, ‘கா’, ‘வட்டம்’, டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அவர், விடுமுறை பயணமாக எகிப்து நாட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகளை பார்த்தது மற்றும் பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இதை தொடர்ந்து எகிப்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு  அவர் சென்று வந்த போட்டோக்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.

Related Stories: