மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை பட்டியலில் வேளாங்கண்ணி சர்ச் சேர்ப்பு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: மூத்த குடிமக்களுக்குகான இலவச புனித யாத்திரை பட்டியலில் தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்காக இலவச புனித யாத்திரை திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி  முதல் டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த இலவச யாத்திரை பட்டியலில் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் ஆயிரம் யாத்திரீகர்களை ஏற்றிச் செல்லும் முதல் பயணம் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து ஆன்லைனில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘கிறிஸ்தவ சகோதரர்கள் கோரிக்கை ஏற்று பயண பட்டியலில் வேளாங்கண்ணி சேர்க்கப்பட்டுள்ளது,” என்றார்.

Related Stories: