விருதுநகரில் 10 ஆண்டுகளாக புதுப்பிக்காத ஏ.ஏ ரோடு-பேராலி மக்கள் அவதி

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ளது ஏ.ஏ ரோடு. இந்த ரோடு வழியாகத்தான் சின்னபேராலி, பெரிய பேராலி, கருப்பசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.மேலும் ஏ.ஏ ரோடு துவங்கி பேராலி ரோடு வரையில் 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர், கனரக வாகனங்கள், சரக்கு வேன்கள், சரக்குகளை ஏற்றி, இறக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வேன்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.500 மீ தூரமுள்ள ஏ.ஏ ரோடு வழியாக தினசரி பேராலி கிராமத்திற்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன.

மேலும் இந்த சாலை வழியாக கருப்பசாமி நகர், பேராலி கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் தினசரி வேலை நிமித்தம் விருதுநகர் வந்து செல்கின்றனர். விருதுநகர் நகராட்சி பகுதியில் நடமாட தகுதியற்ற ஒரே சாலை என்ற பெயரை கடந்த 10 ஆண்டுகளாக ஏ.ஏ ரோடு பெற்றுள்ளது.

அந்தளவிற்கு சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது ெதாடர் மழையால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக கிடப்பதால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் ஏ.ஏ. ரோடு சாலையை புதுப்பிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: