தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பு: முதலமைச்சருடன் ஒன்றியக்குழுவினர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு கடந்த 21ஆம் தேதி ஞாயிறன்று சென்னை வந்தது. இந்த குழு இரண்டாக பிரிந்து ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு மற்றும் ஆர்.பி. கவுல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு என இரண்டாக பிரிந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மகாபலிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களையும் அடுத்த நாள் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களையும் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் முதலமைச்சருடன் இந்த சந்திப்பு நடந்து வருகிறது. உடனடி நிவாரண உதவி ரூபாய் 550 கோடியும், நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்காக 2029 கோடி வழங்க வேண்டும் என ஏற்கனவே ஒன்றிய அரசிடம் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் குழு மனு அளித்திருந்தனர். சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே 700 கோடி ரூபாய் அளவிற்கு செலவு இருக்கிறது. சாலைகளை மேம்படுத்த வேண்டும். பாதிப்புகள் குறித்து நேற்றைக்கு கூட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ஒன்றிய குழு முதலமைச்சருடன் சந்தித்து பேசி வருகின்றனர்.

Related Stories: