அழகர்மலை சாலையில் ஏற்பட்ட மண் சரிவுகளை அகற்றும் பணி துவக்கம்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள அழகர்மலை செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவுகளை அகற்றும் பணிகளை ஊட்டி எம்எல்ஏ துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதமாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ெபரும்பாலான கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலையோரங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடுகளின் அருகேயுள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

மேலும், பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஊட்டி அருகேயுள்ள அழகர் மலைக்கு செல்லும் சாலையோரங்களில் பல்வேறு பகுதிகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளுக்கு அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டி எம்எல்ஏ., கணேஷ் நேற்று அழகர்மலை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்புக்களுக்கு செல்லும் வழித்தடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், நடைபாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, தலைகுந்தாவில் இருந்து அழகர் மலை செல்லும் சாலையில் ஏற்பட்டிருந்த மண் சரிவுகளை அகற்றும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது, பொது செயலாளர் சம்பத்குமார், மகளிர் அணி தலைவி ராஜேஷ்வரி, மாநில மகளிர் அணி பொது செயலாளர் சித்ரா, மாவட்ட செயலாளர் பாபு, மனித உரிமை கழக மாவட்ட தலைவர் மேலூர் நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: