ஜெய்ப்பூர்: பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை 5 ரூபாயும் ராஜஸ்தான் மாநில அரசு குறைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதன் காரணமாக நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின. தொடர்ந்து, உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
