கனடாவில் அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள்... ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது!!

கனடா : கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்களன்று பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால், அப்பகுதி முழுவதும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே எண்ணெய் குழாய்களும் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி ஒரு நகரமே முழுமையாக வெளியேற்றப்பட்டது. வான்கூவரில் கனமழைக்கு இடையே வீசிய சூறாவளி காற்றால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு மேல் எழும்பின.

இதனால் விசை படகுகளும் பாய்மர கப்பல்களும் உடைந்த நிலையில், கரை ஒதுங்கியுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.கடந்த ஜூன் மாதத்தில் நிலவிய கடும் வெப்பத்தால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.அதற்கு முன்பு ஏற்பட்ட காட்டுத் தீயால் நகரமே பேரழிவை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் மழை மற்றும் வெள்ளத்தால் பிரிட்டிஷ் கொலம்பியா நிலை குலைந்துள்ளது.

Related Stories: