உள்ளாட்சி தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட 21ம் தேதி முதல் விருப்ப மனு: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து வருகிற 21ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. விருப்ப மனு கட்டணம் மாநகராட்சி வார்டுகளுக்கு ₹3,000, நகராட்சி வார்டுகளுக்கு ₹2,000, பேரூராட்சி வார்டுகளுக்கு ₹1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி காலை 10.30 மணி அளவில் 21 மாநகராட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும். சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும், பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுக்களை நானே பெற்றுக்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் விருப்ப மனுக்களை பாஜ தலைவர் கே.அண்ணாமலை, துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் பெறுகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு  முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம், மாநில செயலாளர் டால்பின் பி.தரன், தாம்பரம் மாநகராட்சிக்கு மாநில துணை தலைவர் எம்.சக்ரவர்த்தி, மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், ஓபிசி அணி மாநில தலைவர் ஜெ.லோகநாதனும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: