வாரணவாசி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வாலாஜாபாத்: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்   இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் வாரணவாசி, ஆம்பாக்கம், அளவூர், தாழையம்பட்டு, ராமானுஜபுரம் ஆகிய கிராமங்களில்  மக்கள் கூடும் இடத்தில் கிராமிய  கலைக் குழுவினரால் தப்பாட்டம், நாடகம் , பாடல்கள் மூலமும் கிராமப்புற மாணவ, மாணவிகள் தங்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு  எவ்வாறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இல்லம் தேடிகல்வியின் சிறப்பு அம்சங்கள் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வாரணவாசி ஊராட்சி தலைவர்  பிரேமா மோகன சுந்தரம் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: