ஆஷா பணியாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.10,000: பிரியங்கா காந்தி புதிய வாக்குறுதி

புதுடெல்லி:  ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வழங்கப்படும்,’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பார்க்க சென்ற ஆஷா பணியாளர்களை போலீசார் தாக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் பிரியங்கா நேற்று வெளிட்டுள்ளார். மேலும், ‘ஆஷா சகோதரிகள் மீது உத்தரப் பிரதேச அரசு நடத்தும் ஒவ்வொரு தாக்குதலும் அவர்களால் செய்யப்படும் பணியை அவமதிப்பது போன்றதாகும். கொரோனா காலத்தில் உங்கள் சேவை போற்றத்தக்கது. கவுரவம் அவர்களின் உரிமை. அவர்கள் கூறுவதை கேட்பது அரசின் கடமை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: