சிறப்பு ரயில்களை ரத்து செய்து வழக்கமான ரயில்களை இயக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் பரவல் பெருமளவு குறைந்திருப்பதால் மீண்டும் அனைத்து ரயில்களை இயக்குவது, சலுகைகளை தொடர்வது ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். ரயில்வே துறையால் பல காலமாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 53 பிரிவினருக்கான பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் ஆண்டுக்கணக்கில் மேற்குறிப்பிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக 60 வயது மூத்த குடிமக்கள் உட்பட பலரும் வருமானம் இன்றி அவதிப்படுகிறார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது நோய் பரவல் பெருமளவு குறைந்திருப்பதால் சிறப்பு ரயில்களை ரத்து செய்து, வழக்கமான ரயில்களை இயக்க அனுமதித்து, ரயில் பயணிகளுக்கான அனைத்து சலுகைகளையும் உடனடியாக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று ரயில்வே துறைக்கும், ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறேன்.

Related Stories: