அமெரிக்காவில் 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சினை செலுத்த பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை

நியூயார்க்: அமெரிக்காவில் 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சினை செலுத்த பாரத் பயோடெக் நிறுவனம் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தது.

இந்தியாவின், பாரத் பயோ டெக் நிறுவனம், கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் என்ற பெயரில், தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியா முழுவதும் பயன்டுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்த உலக சுகாதார அமைப்பு, பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இருந்தது.

இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெளி நாடுகளுக்கு பயணிக்க உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து 17 நாடுகளில் கோவாக்சின் அனுமதிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கோவாக்சின் தடுப்பூயை செலுத்திக்கொண்டனர். இந்நிலையில் சுமார் 526 சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டதில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்துவதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.

Related Stories: