முதல்வர் பசவராஜ்பொம்மை ஆட்சியின் 100 நாள் சாதனை

பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்று நூறு நாட்கள் முடிந்துள்ள நிலையில், அவரது நிர்வாகத்தில் செய்துள்ள சில சாதனைகளை பார்ப்போம்.

* மாநில முதல்வராக கடந்த ஜூலை 28ம் தேதி பதவியேற்றதும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இத்திட்டத்திற்காக ₹1000 கோடி ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம் 19 லட்சம் விவசாயிகளின் பிள்ளைகள் பயனடைந்து வருகிறார்கள்.

* நாட்டில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்வி கொள்கையை கர்நாடகாவில் முதலாவதாக அமல்படுத்தினார். முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகளுக்கு வழங்கி வந்த மாதந்திர உதவிதொகையை ₹1,200 ஆக உயர்த்தினார்.

* நாடு சுதந்திரம் பெற்றதின் 75வது பளவவிழாவை அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்துவதின் மூலம் கொண்டாட உத்தரவிட்டதுடன், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்கு தனி அமச்சகம் அமைத்தார். கர்நாடக போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்தது, ஆன்லைன் சூதாட்டத்தை தண்டனை பெறும் குற்றமாக அறிவித்தார்.

* மாநில அரசின் சார்பில் சங்கொள்ளி ராயண்ணா தினம் கொண்டாட உத்தரவு. கல்யாண-கர்நாடக பகுதி மேம்பாட்டிற்கு கூடுதலாக ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்தது. மும்பை-கர்நாடக பகுதியை கித்தூர் கர்நாடக என பெயர் மாற்றம் செய்தது. பல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து விஜயநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியது.

* கிராமபுற மக்களுக்கும் இணையதள சேவை வழங்கும் நோக்கத்தில் ‘‘கிராம சேவை திட்டம்’’ அறிமுகம். கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு காலி செய்த கிராம மக்களின் மேம்பாட்டிற்கு ₹4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கே.ஆர்.எஸ். அணை மற்றும் விஷ்வேஸ்வரய்யா கால்வாய் திட்ட புனரமைப்பு பணிக்கு ₹500 கோடி ஒதுக்கீடு. எத்தினஹோளே திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.

* பிரதமர் டேஷ் போர்டு மாதிரியில் கர்நாடக முதல்வர் டேஷ் போர்டு அமைத்தது. இதன் மூலம் ஒவ்வொரு துறையில் செயல்படுத்தி வரும் திட்டங்களை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதி ஏற்படுத்தியது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் 30 சேவைகள் பெறும் வசதி ஏற்படுத்தியது. கடந்த இரு நாட்களுக்கு முன் ‘‘வீடு தேடி அரசு சேவை’’ திட்டம் அறிமுகம் செய்தது.

Related Stories: