முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு எதிரொலி புதுப்பொலி பெறும் மாமல்லபுரம் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதி: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம், அடுத்த பூஞ்சேரி பகுதியில் அஸ்வினி (25), என்ற நரிக்குறவ பெண் வசித்து வருகிறார். இவரது சமூகத்தை சேர்ந்த சில தோழிகளுடன் கடந்த அக்டோபர் 24ம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு மூலம் இலவசமாக வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட சென்றார். அப்போது, திருப்பி அனுப்பிவிட்டதாக, அந்த நரிக்குறவ பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த, வீடியோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த அக்டோபர் 29ம் தேதி நாட்களுக்கு முன்பு பெண்ணை அழைத்து ஆறுதல் கூறி, சமாதானப்படுத்தி அப்பெண்ணுடன் அமர்ந்து கோயிலில் அன்னதானம் சாப்பிட்டார்.

அப்போது, அந்த பெண், அமைச்சரிடம், `எங்கள் சமூகத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி மெய்க்கால் புறம்போக்கில் இடம் வழங்கப்பட்டது. அந்த, இடத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை’ என முறையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில்அந்த பகுதியில் வீட்டுக்கு வீடு குழாய் பொருத்தும் பணி, குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

Related Stories: