நெருங்கும் தீபாவளி: கள்ளக்குறிச்சியில் டாஸ்பாக் கடைகளுக்கு போட்டியாக அதிகரிக்கும் கள்ள சாராய விற்பனை..பொதுமக்கள் புகார்..!!

கள்ளக்குறிச்சி: தீபாவளி நெருங்குவதால் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராய விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்மலை, மாதோர், எழுத்தவாய் நத்தம், கரடி சித்தூர், தாவடிபட்டி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகல் நேரத்திலேயே கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது என்பது புகார். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், எழுத்தவாய் நத்தம் கிராமத்தில் பகல் நேரத்திலேயே கள்ள சாராய விற்பனை நடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் டாஸ்பாக் மதுக்கடைகளுக்கு போட்டியாக கள்ளச்சாராய வியாபாரிகளும் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாக கூறியுள்ள கிராம மக்கள், அவற்றை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: