தா.பழூர் அருகே உள்ள நடுவலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் வெட்டிஅகற்றம்

தா.பழூர் : தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் சமத்துவபுரம் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையே வளர்ந்த மரக்கிளைகளை தினகரன் செய்தி எதிரொலியால் வெட்டி அகற்றப்பட்டது.

தா.பழூர் அருகே நடுவலூர் துணைமின் நிலையம் அருகே சாலையோரம் உள்ள வேப்பமரம் மற்றும் புளிய மரத்தின் கிளைகளுக்கு இடையே மின்கம்பிகள் செல்கின்றன. இந்த சாலை அதிகமாக போக்குவரத்து நிறைந்த சாலையாகும். அரியலூரில் இருந்து சுத்தமல்லி, தா.பழூர் வழியாக கும்பகோணம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வாகன போக்குவரத்து செல்லக்கூடிய பிரதான சாலை. இந்நிலையில் மழைக் காலங்களில் ஏற்படும் காற்றினால் மரக்கிளைகளில் மின்கம்பிகள் உரசி தீ பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மின்கம்பிகள் சாலையில் செல்பவர்கள் மீது அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஆகையால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் கம்பிகளில் உரச கூடிய மரக் கிளைகளை அகற்றி பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த செய்தி நேற்றைய தினகரனில் வெளியானது.

இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மின் ஊழியர்கள் இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். விபத்துக்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்த மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: