எட்டா உயரத்திற்கு செல்லும் ஆபரணத் தங்கத்தின் விலை!: சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை...கலக்கத்தில் நகை பிரியர்கள்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.200 அதிகரித்துள்ளது. நாள்தோறும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. காலையில் உயர்வதும், மாலையில் குறைவதும் தங்கத்தின் வாடிக்கையாகவே உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகமும் மிக அதிகம்.

இதனிடையே தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் நகை வாங்க பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவது நகை பிரியர்களை வருத்தமடைய செய்திருக்கிறது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்திருப்பது நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,525க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10க்கு விற்பனை ஆகிறது.

Related Stories:

More
>