கோவிலூர் பஞ்சாயத்து ஏரிகளில் 15 ஆயிரம் பனை விதை நடவு

காரிமங்கலம் : காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் பஞ்சாயத்தில் உள்ள சென்றாயனன்அள்ளி ஏரி, மொளப்பன் அள்ளி ஏரி, தொன்னையன் அள்ளி ஏரி ஆகியவற்றில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் பனை விதை நடவும் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி நந்திசிவம் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் தீபா சேகர், ஒன்றிய கவுன்சிலர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிடிஓ கிருஷ்ணன் பங்கேற்று ஏரிகளில் பனை விதை நடவும் பணியை துவக்கி வைத்து பேசினார். 3 ஏரிகளில் 15000 பனை விதை நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதி, ஜோதி, தர்மன், காளியம்மாள், பாரதி, முருகன், ராஜம்மாள், ராதாகிருஷ்ணன், தங்கராஜ், சரவணன் கோவிந்த பாலாஜி, ஊராட்சி செயலாளர் நவீன் பாஷா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: