ஆத்தூரில் அசுத்தமாக இருந்த பயணியர் நிழற்குடை பளிச்

சின்னாளபட்டி : ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே பயணிகள்  நிழற்குடையில் திருமண வாழ்த்து, கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட பல்வேறு  வால்போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். மேலும் பயணியர் நிழற்குடை பயன்படுத்த  முடியாத அளவிற்கு அசுத்தங்கள் நிறைந்திருந்தது. இதுகுறித்து கடந்த அக்.25ல்  தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர்  விசாகன் நிழற்குடையில் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டர்களை அகற்றி,  கிருமிநாசினி அடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆத்தூர் ஊராட்சி மன்ற  நிர்வாகத்தினர் நிழற்குடையில் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டர்களை அகற்றினர்.  மேலும் நிழற்குடையின் உள்ளே சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்தனர். இதை  கண்டு மகிழ்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன்  நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட கலேக்டருக்கும் நன்றி  தெரிவித்து கொண்டனர்.

Related Stories: