கொரோனா விழிப்புணர்வு

பூந்தமல்லி: கொரோனாவால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி குமணன் சாவடியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்த பூந்தமல்லி சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சார்பில் துணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சேகர் ஆகியோர் அறிவுறுத்தினர். அதன்படி நடந்த இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி, கோயம்பேடு இன்ஸ்பெக்டர்கள் சுபாஷினி, துளசி மணி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக்கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் வந்த மக்களை நிறுத்தி அணிவித்ததுடன், கொரோனாவின் பாதிப்பு குறித்து எடுத்து கூறினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் உள்பட ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர்.

Related Stories: