சிறுவாக்கம் கிராமத்தில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் மக்கள், கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் பெய்த தொடர்மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வள்ளியம்மன் குளம், சங்கரன் குளம் நிரம்பி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 5ம் தேதி முதல் மழைநீர் தேங்கியுள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் பள்ளிக்கூடம், அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது. குளத்தைச் சுற்றி தற்காலிக வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதால் மழைநீரை வெளியேற்றுவது எப்படி என தெரியவில்லை.  இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ரேஷன் கடைக்கு செல்வதற்கு தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வாக சிமென்ட் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: