புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்‍கரை, 10 கிலோ அரிசி இலவசம்!: தீபாவளியையொட்டி ஸ்வீட் நியூஸ் வெளியிட்ட மாநில அரசு..!!

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்‍கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்க அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பட்டாசு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றனர். மேலும் சுவையான திண்பண்டங்களும் தயாராகி வருகிறது. புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளியையொட்டி புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் இது தொடர்பாக கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதுச்சேரி முதல்வர் தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்‍கரையும், 10 கிலோ அரிசியும் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் தர முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் நியாயவிலை கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அத்துடன் கடைகளின் பட்டியல் விவரத்தையும் இரண்டு நாட்களுக்குள் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. இந்த ஊக்கத்தொகையின் மூலம் சுமார் 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தீபாவளி போனஸ் தொகையின் மூலம் அரசுக்கு ரூ.18 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: