போலீசார் மீது தாக்குதல் குடும்பத்துடன் ரவுடி கைது

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் ரவுடி விக்னேஷ் (27). வழக்கு ஒன்றில் இவரை கைது செய்ய நேற்று முன்தினம் போலீசார் இவரது வீட்டிற்கு  சென்றனர்.  அங்கு, விக்னேஷை கைது செய்ய விடாமல் அவரது குடும்பத்தினர் போலீசாரை தாக்கினர். இதையடுத்து, துப்பாக்கி முனையில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக அவரது மனைவி சசிகலா, தாய் சாந்தி, தந்தை மோகன் மற்றும் உறவினர்கள் தீபா ஆண்டோ கிளாரா, அனிதா, கலைவாணி, கஜலட்சுமி, சந்திரா, திவ்யா, நந்தகுமார் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விக்னேஷிடம் இருந்து 270 கிலோ போதை மாத்திரைகள், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>