பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்... போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!

சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.நவம்பர் 1ம் தேதியிலிருந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன. அதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்து பாடம் கற்பதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வகுப்பறைகள், விடுதிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் வெளியூரிலிருந்து பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்காக இலவச பஸ் பாஸ் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத்துறை சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அதுவரை பழைய பஸ் பாஸை காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. இதனிடையே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்டு நடத்துநர்கள் கடிந்துகொள்ளாத வகையில், இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கும் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

More
>