சசிகலா குறித்து சூரியனை பார்த்து... என பழனிசாமி விமர்சனம் : கண்ணியத்துடன் பேச வேண்டும் என ஓபிஎஸ் விமர்சனம்!!

சென்னை : இரட்டைத் தலைமையின் கீழ் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி பொதுச்செயலாளர் என்ற பெயருடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா நலத்திட்ட உதவிகளை செய்தார். தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அவரை சட்டரீதியாக சந்திப்போம் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது, சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு). அத நான் ஓபனா சொல்ல முடியாது, என்று எடப்பாடி பேசி இருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம், அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்றார். எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்த நிலையில், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்றார். மேலும் அதிமுக தொண்டர்கள் முதல் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவை நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்றும் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>