தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் சோதனை: லஞ்சஒழிப்புத்துறை அதிரடி..!

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார் இளங்கோவன். அதிமுகவின் ஜெ.பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன். திருச்சியில் முசிறியில் இளங்கோவனுக்கு சொந்தமான பாலிடெக்னிக், கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சேலம் மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குபேந்திரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணை தலைவராகவும் குபேந்திரன் உள்ளார்.

சேலம் இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 -2020 வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், ரூ.3.78 கோடி சொத்துக்களை குவித்ததாக இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: