உத்ராகண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிழந்தோர் எண்ணிக்கை 46ஆக அதிகரிப்பு: நிவாரண பணிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு

டோராடூன்: தொடர் கனமழை காரணமாக உத்ராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து பாலங்களும் அடித்துச்செல்லப்பட்டன. இந்நிலையில் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

சாலைகள் சீரமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து ஏற்படுத்தப்படும் என கூறிய முதலமைச்சர் சீரமைப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு 10கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 11 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு படையினர்  இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மீட்பு பணிகளை விரைவு படுத்தியுள்ளனர். குறிப்பாக நிலச்சரிவால் வாகன போக்குவரத்து தடைபட்டு யாத்திரை சென்ற பலர் ஆங்காங்கே தவித்து வருகின்றனர் அவர்களை மீட்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் இருக்காது என நம்பப்படுகிறது.

Related Stories: