வருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்

வருசநாடு : வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்திற்கான தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, காமராஜபுரத்திற்கு புதிய தார்சாலை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. மேலும் பாரத பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.19 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து முதல் கட்டமாக காமராஜபுரம் வரை சில இடங்களில் தரை தடுப்புசுவர் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றது.

பின்னர் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. அப்போது தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து 2 ஆண்டுகளாக வனத்துறையினர் தடையை நீக்கவில்லை. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய தார்சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினார்.  இதனையடுத்து கடந்த சில நாட்களாக காமராஜபுரம் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். 2 வருடங்களுக்கு பின்பு புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்துமலைக் கிராமவாசி லட்சாதிபதி கூறுகையில், ‘‘கலெக்டர் மலைக் கிராம மக்களின் நலன் கருதி தார்ச் சாலை அமைப்பதற்கு உதவி செய்துள்ளார், இதேபோல் வருசநாடு முதல் வாலிப்பாறை வரை உள்ள மலைச் சாலையை விரைந்து செய்வதற்கு உத்தரவிடும்படி மலை கிராமம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம், என்றனர்.

Related Stories: