தோல்வியான உறுப்பினர் பெயர் ஆன்லைனில் குளறுபடி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 26 ஒன்றிய கவுன்சிலர், 54 ஊராட்சி தலைவர், 408 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் இரும்புலிச்சேரி ஊராட்சி 5வது வார்டில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் நாகராஜன் என்பவர் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் ஆன்லைனில் நாகராஜன் பெயருக்கு பதிலாக, தோல்வியடைந்த சாரதியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் யார் பதவியேற்பபது என்ற கேள்வி, குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, வெற்றி பெற்றது நாகராஜன் தான். ஆனால் தவறாக ஆன்லைனில் சாரதி என்பவர் பெயர் இடம் பெற்றுவிட்டது. அதை உடனடியாக நீக்க பணிகள் நடக்கிறது என்றனர்.

Related Stories:

More
>