பெண்களுக்கு எதிரான தாக்குதல் எதிரொலி.: உ. பி. சட்டசபை தேர்தலில் 40% தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த காங்கிரஸ் முடிவு

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 40% தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.  லக்னோவில் அனைத்து மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

எனவே பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கவே 40% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு எடுத்துள்ளதாக பிரியங்கா தெரிவித்தார். பெண்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். மேலும் அவர் பேசியதாவது, பெண்களை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற விரும்புகிறோம். சட்டமன்றத்தில் பெண்கள் அதிகம் இடம் பெற வேண்டும்.அப்போது தான் பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும், என்றார்.

Related Stories:

More
>