துப்பாக்கியால் சுட்டு பெண்ணிடம் நகை பறிப்பு என்கவுன்டரில் கொல்லப்பட்ட வாலிபர் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு: போலீசாரே இறுதிச்சடங்கு செய்தனர்

சென்னை: என்கவுன்டரில் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை வாங்க, அவரது பெற்றோர் மறுத்ததால் போலீசாரே இறுதி சடங்கு செய்தனர். ஒரகடத்தில் டாஸ்மாக் கடையில் கடந்த 4ம் தேதி மர்ம நபர்கள் தாக்கியதில் சேல்ஸ்மேன் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சேல்ஸ்மேன் ராமு காயம் காரணமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 10ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி அருகே மர்ம ஆசாமிகள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடுநடத்தி, பெண்ணிடம் செயின் பறித்தனர். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து பல மணி நேர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், கொள்ளையனுக்கும் நடந்த சண்டையில், அவன் எண்கவுன்டர் செய்யப்பட்டான். மற்றொரு கொள்ளையனை கைது செய்யப்பட்டான்.

இந்த சம்பவங்கள் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஸ்ரீபெரும்புத்தூா் டோல்கேட் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட முர்தசா உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அவனுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்து,வந்து உடலை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். ஆனால் முர்தசாவின் பெற்றோர், ஜார்கண்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர மறுத்துவிட்டனர். அதோடு இப்படிப்பட்ட ஒருவனின் உடலை வாங்கி, அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நாங்கள் விரும்பவில்லை. போலீசே இறுதி சடங்கை செய்துவிடும்படி காஞ்சிபுரம் மாவட்ட போலீசுக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து போலீசாரே கொள்ளையனின் உடலை செங்கல்பட்டு சுடுகாட்டில் அவனுடைய இறுதி சடங்குகளை செய்து முடித்தனர்.

Related Stories:

More
>