புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 4.8 கிலோ தங்கம் சிக்கியது

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 4.8 கிலோ தங்கம் சிக்கியது. ரூ.24 லட்சம் ரொக்கம், 3.75 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் வீட்டில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>