கம்பம்மெட்டு அருகே அபூர்வ ரக இலை வடிவ பூச்சி

கம்பம்: கம்பம்மெட்டு அருகே உள்ள சுற்றுலாத்தலமான ராமக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் சாபு. நேற்று முன்தினம் இவரது வீட்டு வாசலில் மா இலை ஒன்று அசைந்து செல்வதுபோல் தெரிந்தது. அவர் ஆச்சரியத்துடன் அருகில் சென்று பார்த்தபோது, அது இலை அல்ல இலைபோல் காட்சியளிக்கும் அபூர்வ ரக பூச்சி என தெரியவந்தது. உடனடியாக இந்த பூச்சியை படமெடுத்த சாபு அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். சமூக வலைதளத்தில் பூச்சியின் படத்தை பார்த்த பல்வேறு கருத்தக்களை பதிவு செய்தனர். இது குறித்து இரவிகுளம் தேசிய பூங்கா உதவி வனவிலங்கு பாதுகாவலர் கூறுகையில், ‘‘இந்த இலைப்பூச்சியின் அறிவியல் பெயர் லீப் மியாமி என்பதாகும்.

எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, அசைவின்றி இலைவடிவத்துக்கு மாறிவிடும். எதிரிகள் சென்ற பின்னர், தனது உருவத்திற்கு மாறிவிடும். அடர்ந்த காடுகளிலும் மரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே லீப் மியாமி காணப்படும். குடியிருப்பு பகுதிக்கு இவைகள் அதிகம் வருவதில்லை’’ என்றார். குடியிருப்பு பகுதிக்கு திடீரென வந்த லீப் மியாமியை அப்பகுதிமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories:

More
>