சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை

கொடைக்கானல்: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 15 கிராம ஊராட்சிகளில் 10 கிராம ஊராட்சிகளில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. இதனால் 3ம் அலை ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றே  கூறலாம்.  அதனால், கொரோனா 3வது அலை தமிழகத்தில் இல்லை. ஆனாலும், ஒவ்வொருவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்துத் துறைகள் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமில்லை. 2017ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்த டெங்கு பாதிப்பு அளவிற்கு தற்போது இல்லை. இருப்பினும் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>