மைதானத்தை அபகரித்தால் கையை வெட்டி விடுவேன்: திரிணாமுல் எம்எல்ஏ மிரட்டல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட கமராதி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருப்பவர் மதன் மித்ரா. இவர், இம்மாநில முன்னாள் விளையாட்டு துறை அமைச்சராவார். தனது தொகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை அபகரித்து, திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கமான சிலர் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் மதன் மித்ரா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பதிவில், ‘நானும், எம்பி சவுகத்தா ராயும் விளையாட்டு மைதானத்தை அழகுப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில்,  சில கிரிமினல்கள் இதில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட முயற்சிக்கின்றனர். இதில், சம்பந்தபட்ட 3 பேர் மீதும் புகார் கொடுப்பேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களுடன் சேர்ந்து மைதானத்தை காப்பாற்றுவேன்.

அவர்கள் என்னை மிரட்டலாம் அல்லது விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர். அவர்கள் மைதானத்தில் சுண்டு விரலை வைத்தாலும் கூட, அவர்களின் கைகளை வெட்டி விடுவேன்,’ என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து,  அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories:

More
>