மறுகுடியமர்வு, மறுவாழ்வு வரைவு அறிக்கை பொதுமக்களின் கருத்தறிய கால அவகாசம் வேண்டும்: மா.கம்யூ வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக அரசின் ‘குடிசை பகுதி மக்களை மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு’ குறித்த வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டும் இணையத்தில் வெளியிடப்பட்டு கருத்து கேட்பு கோரப்பட்டிருந்தது. மக்கள் மத்தியிலிருந்து ஆலோசனை பெறவேண்டிய, வாழ்வுரிமை சார்ந்த செயல்பாட்டில், வரைவு அறிக்கை தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.அந்த வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், வரைவு அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்று கருத்து அறியும் வகையில் விரிவான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ப கருத்து சொல்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

Related Stories:

More
>