சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிப்பு

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை சசிகலா ஏற்றினார்.  அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா  மாலை அணிவித்து மரியாதை செய்தனார்.  எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள நினைவில்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50-வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொண்டர்கள் படைசூழ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் வட்டம், கிளைக்கழகம் சார்பில் அ.தி.மு.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

Related Stories: