துபாய்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை முதன் முறையாக இந்தியா வென்றது.
மேலும், 2009ம் ஆண்டு பாகிஸ்தான், 2010-ம் ஆண்டில் இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் 2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டு இலங்கையும் கோப்பையை வென்றன. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் நாளை 7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகின்றன.