அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அப்துல் காலமின் பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாக அனுசரித்து வருகிறோம். தன் வாழ்வின் பெரும்பாலான பகுதியை நாட்டிற்காகவும் மாணவர்களுக்காகவும் அர்ப்பணித்த அறிவியல் விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைருமான அப்துல் கலாமின் பிறந்த நாள்(அக்டோபர் 15). ஐநா சபையால் உலக மாணவர் தினமாக 2010 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர்கள் தினம் அக்டோபர் 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

அப்துல் கலாம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்; அப்துல் கலாம் அவர்கள் தனது வாழ்நாளை இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும், திறமையாகவும் மாற்ற அர்ப்பணித்துள்ளார். எப்போதுமே நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

கலாம் குறித்து கமல் வெளியிட்டுள்ள பதிவில்; நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: