ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அக்கா- தங்கை வெற்றி

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் போட்டியிட்ட அக்கா- தங்கைகள், ஊராட்சி தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கண்ரங்கம். இவரது மகள்கள் மாலா சேகர் (50)  மற்றும் உமா கண்ரங்கம் (48) ஆகியோர் கடந்த 6ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் காவேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாலா சேகர்  போட்டியிட்டு 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது தங்கை உமா கண்ரங்கம் ஜோலார்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 1972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா- தங்கை தலைவர் பதவிக்கும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதை அப்பகுதி மக்கள் பாராட்டி வரவேற்றனர்.

Related Stories: