பெங்களூருவில் கனமழை.! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கெம்பேகவுடா விமான நிலையத்தில் நீர் புகுந்ததால் பயணிகள் டிராக்டரில் பயணம் செய்தனர். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு புயல் சின்னமாக உருவாகி உள்ளது. அதன் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. பெங்களூரு மாநகரில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கி மழை, அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து, காலை முதல் மாலை வரை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் தூக்கமின்றி தவித்தனர். பல இடங்களில் வீடுகளில் புகுந்த மழைநீரை விடிய விடிய வெளியேற்றினர்.  கடும் மழையால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. ஆரம்பத்தில் வாகன பார்க்கிங் இடத்திலும் சூழ்ந்த தண்ணீர் பின் ஓடு தளத்தில் நுழைந்தது. மணல் மூட்டைகள் அடுக்கி தடுத்து நிறுத்தியும் முடியவில்லை. இதனால் விமானங்கள் தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையைாக 11 விமான சேவைகளை ஏர்போர்ட் நிர்வாகம் ரத்து செய்தது. விமான நிலையத்திற்கு வெளியிலும் தண்ணீர் தேங்கியதால் வெளிநாடு பயணிகளை டிராக்டர் மூலம் அனுப்பி வைத்தனர்.

Related Stories: