கரணம் தப்பினால் மரணம் குன்னூர் லாஸ் பால்ஸ் பகுதியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

குன்னூர் : குன்னூரில் தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் ஆர்ப்பரிக்கும் அருவியின் அருகே  அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. கன மழையால் அனைத்து ஏரிகள்,  அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது.

அணைகள் நிரம்பி தண்ணீர் அதிகளவில் மலைப்பாதையில் வழியாக நீர்வீழ்ச்சிகளாக  பயணித்து மேட்டுப்பாளையம் பவானி அணையை அடைகிறது‌. குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் லாஸ் பால்ஸ் பகுதியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. அதேபோன்று காட்டேரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் வன விலங்குகளுக்கு  தேவை தண்ணீர் கிடைக்கிறது. இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ்ஃபால்ஸ் பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அதனை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அபாயகரமான நீர்வீழ்ச்சியின் அருகில் நின்று செல்பி, புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

சாலையோரத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பதுபோல நின்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். எனவே காவல்துறையினர் நீர்வீழ்ச்சி பகுதியில் அத்துமீறி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: